உக்ரைனின் சுமி நகரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து, உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கூட்டத்தைத் தாக்கியதாககூறியது.
இந்த ரஷ்ய தாக்குதல்கள் 34 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 117 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் கூறியது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்வு தெரிவித்த தகவலின்படி, மக்கள் அடர்த்தியான நகரத்தின் மையத்தில் உக்ரைன் இராணுவ வசதிகளை வைத்து, வீரர்களை உள்ளடக்கிய நிகழ்வுகளை நடத்தியதன் மூலம் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது.
“மனித கேடயம்” குற்றச்சாட்டுக்கு உக்ரைனிடமிருந்து உடனடி பதில் இல்லை.
உக்ரைனின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு தந்திரோபாயக் குழு என்று அழைக்கப்படும் “கூட்ட அரங்கில் இரண்டு இஸ்கந்தர்-எம் தந்திரோபாய ஏவுகணைகளை” அதன் படைகள் ஏவியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாக்குதலில் 60 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக அது கூறியது.
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான சர்வதேச பதிலைக் கோரினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது உறுதிமொழியை நோக்கி முன்னேற போராடும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
“சாதாரண மக்களின் உயிரைப் பறிக்கும் அயோக்கியர்களால் மட்டுமே இதுபோல் செயல்பட முடியும்,” என்று ஜெலென்ஸ்கி கூறினார், சிலர் பாம் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் சென்றபோது தாக்குதல் நடந்ததாகக் குறிப்பிட்டார்.
பிரிட்டன், ஜெர்மனி மற்றும் இத்தாலி தலைவர்கள் தாக்குதலைக் கண்டித்தனர். ரஷ்ய தாக்குதல் குறித்து டிரம்ப்பிடம்கேட்டபோது, அது பயங்கரமானது என்று கூறினார்.
“அவர்கள் தவறு செய்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் மேலும் விவரிக்காமல் கூறினார். “ஆனால் அது ஒரு பயங்கரமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.”
ரஷ்ய ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தனது தினசரி மாநாட்டில் டிரம்பின் கருத்தை கிரெம்ளின் எவ்வாறு பார்க்கிறது மற்றும் தாக்குதல் தவறாக நடத்தப்பட்டதா என்று கேட்கப்பட்டது.
போரின் போக்கைப் பற்றி கிரெம்ளின் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், இது பாதுகாப்பு அமைச்சகத்தின் விஷயம் என்றும் அவர் பதிலளித்தார்.
“எங்கள் ஜனாதிபதி மற்றும் எங்கள் இராணுவ பிரதிநிதிகள் இருவரும் மீண்டும் மீண்டும் கூறியதை மட்டுமே நான் உங்களுக்கு நினைவூட்ட முடியும், எங்கள் இராணுவம் இராணுவ மற்றும் இராணுவத்திற்கு அருகிலுள்ள இலக்குகளை மட்டுமே தாக்குகிறது” என்று அவர் கூறினார்.