Site icon Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

AI தொழில்நுட்பத்தின் மூலம் இரண்டு யுவதிகளின் போலி நிர்வாணப் படங்களை உருவாக்கியதற்காக அனுராதபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இணையத்தில் பரவலாகப் பரப்பப்பட்டதால் குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டது.

சந்தேக நபர் மார்ச் 29, 2025 அன்று அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2025 ஏப்ரல் 10 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version