30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

பிரித்தானியாவின் தடையால் கொதிக்கும் ஜேவிபி அரசு

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், அவை தொடர்பில் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

நாட்டின் முன்னாள் மூன்று இராணுவத் பிரதானிகள் உட்பட நான்கு பேர் மீது ஐக்கிய இராச்சியம் விதித்துள்ள தடைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் எண்ட்ரூ பேட்ரிக்கிடம் இன்று (26) அறிவிக்கும் போதே வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

“இலங்கை உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் தடைகள்” என்ற தலைப்பில் 2025 மார்ச் 24, அன்று ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளதுடன், அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் பிரதானிகள் ஆவர்.

“சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சொந்தமான அந்நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது உள்ளிட்ட இந்தத் தடைகள், ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கை என்பதை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வலியுறுத்துகிறது.”

நாடுகளால் எடுக்கப்படும் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கை, இலங்கையில் உள்நாட்டு நல்லிணக்க செயல்முறைக்கு எந்த ஆதரவையும் வழங்காது, என்பதுடன், நிலைமையை மேலும் குழப்பமடையச் செய்வதே நோக்கமாகும்” என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment