30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

ஆளுமையற்ற சந்திரசேகரன்; அர்ச்சுனாவின் லூட்டிகள்: சிறிதரன் வெளிநடப்பு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அரச அதிகாரிகளை அவமானப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் சபை நாகரிமற்ற வகையில் தொடர்ந்தும் தர்க்கம் புரிந்தமையாலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட சேயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களுடன் கடும் சர்ச்சையான வாதப் பிரதிவாங்கள் தொடர்சியாக இடம்பெற்றிருந்தன.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனாக்கும் இளங்குமரனுக்கும் இடையில் தான் அதிகமான கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டிருந்தது. அதே போன்று அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் ரஜீவன் எம்பிக்கும் அர்ச்சுனா எம்பிக்கும் இடையேயும் வாக்குவாதங்கள் இடம்பெற்று பரஸ்பர குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன் போது ஒரு கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அரச அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் அரச அதிகாரிகளையும் விமர்சிககும் வகையிலும் கருத்துக்களை அர்ச்சுனா வெளிப்படுத்தி இருந்தார்.

அவரை அமைதிகாக்கும் படி அமைச்சர் சந்திரசேகர் கூறிய போதும் அவர் தொடர்சியாக விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினாலும், இதன் போது இளங்குமரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் தொடர்ந்தும் முரண்பட்டுக் கொண்டிருந்த்ததால் இயல்பு நிலையில் இக் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்த்து.

இந்நிலையில் குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.

ஆனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆளுமையுடையவராக இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் இரச அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படக் கூடாதென்று கூறிய சிறீதரன் எம்பி தொடர்ந்தும் அமைதியில்லாமல் கூட்டத்தில் முரண்படுவதால் இந்தக் கூட்டத்தில் இருந்ததே வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment