யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் கடந்தவாரம் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டிருந்தது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதற்கமைய சந்தேக நபர்கள் மறைந்திருக்கும் இடங்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தறவலின் அடிபடையில் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் கெலும்பண்டார தலைமையிலான சுற்றி வளைப்பில் மூவரை கைது செய்ததுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்களிடமிருந்து வாள்கள் மற்றும் கெரோயின் போதைபொருள் கைப்பற்றபட்டது.
இதனைத் தொடர்ந்து மற்றொரு சந்தேக நபர் சட்டதரணியூடாக சரண்டைந்துள்ளார். இவர்களிடமிருந்தும் வாள்களும் மோட்டார் சைக்கிலும் மீட்கப்பட்டுள்ளது.