Pagetamil
இலங்கை

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் சென்ற பெண்ணொருவரிடம் இன்று காலை உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்க நகையை அபகரித்து சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதான சந்தேக நபரை நாளை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Pagetamil

யாழில் ஜேவிபி வேட்புமனு தாக்கல்

Pagetamil

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் சொத்து என எடுத்தியம்ப ஒரு வாய்ப்பு – சுமந்திரன் கருத்து

Pagetamil

ஈ.பி.டி.பி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

Leave a Comment