அனுராதபுர சிறுவர் காப்பகத்தில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரத்தில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் 17 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 49 வயதுடைய முன்னாள் நன்னடத்தை மற்றும் சிறுவர் திணைக்கள பராமரிப்பு ஆணையாளர், 57 வயதான சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பிரிவின் தகவலின்படி, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில், காவல்துறையினர் மாணவி மற்றும் காப்பக அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.
விசாரணைகள் முடிந்ததும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.