Pagetamil
உலகம்

திருமணம் இல்லையா? வேலையும் இல்லை! – புதிய சட்டம்

நிறுவனம் ஒன்று 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட ஒற்றை ஊழியர்கள் திருமணம் செய்யாமலிருந்தால் வேலையை இழக்க நேரிடும் என அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் செயல்படும் Shandong Shuntian Chemical Group Co. Ltd நிறுவனம், தனது ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி, 28 முதல் 58 வயதுக்கு இடைப்பட்ட ஒற்றை ஊழியர்கள், செப்டம்பர் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

South China Morning Post வெளியிட்ட தகவலின்படி, திருமணம் செய்யாமல் இருந்தால் அல்லது விவாகரத்து பெற்றிருந்தால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜூன் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள முடியாவிட்டால், ஊழியர்கள் மீது மதிப்பீடு நடத்தப்படும். மேலும், செப்டம்பர் இறுதிக்குள் அவர்கள் திருமணமாகாமல் இருந்தால், பணியில் இருந்து நீக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய முடியாதவர்களுக்கு ஒரு சுயவிமர்சனக் கடிதம் எழுத வேண்டும் என்பதும் விதியில் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய கட்டாய விதிமுறைகள், ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. திருமண நிலையை அடிப்படையாகக் கொண்டு தொழில்வாய்ப்பை நிர்ணயிப்பது நீதிமுறையில் செல்லுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தக் கொள்கையை சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். திருமண நிலை ஒருவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும் என்பதையும், இதுபோன்ற விதிமுறைகள் ஊழியர்களின் உரிமைகளை பாதிக்கக் கூடாது என்பதையும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!

Pagetamil

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

Leave a Comment