29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
இலங்கை

குமாரபுரம் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கும் குகதாசன் எம்.பி

குமாரபுரம் கிராம மக்கள்மீது இனவாத உள்கட்டமைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மிலேச்சுத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, இதனுடன் தொடர்புபட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்ற வீதி விபத்தின்போது, பூமரத்தடிச்சேனை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், குமாரபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் ஒரு விபத்தாக இருந்த போதிலும், இதன் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஆயுதங்களுடன் வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று குமாரபுரம் கிராமத்தினுள் உள்நுழைந்து அங்கிருந்த அப்பாவி மக்கள்மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல் கும்பலினரால், வீடுகளில் இருந்த பெண்களும் குழந்தைகளும் கூட பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இத்தகைய வன்முறைச் சம்பவம் இனவாதத்தை தூண்டிவிடக்கூடியதொரு அச்சுறுத்தலாகும். இதனால், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக அடையாளம் காண வேண்டும். அரசாங்கம் சட்டத்தின் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி, இனவாத சக்திகளின் தூண்டுதலால் நடந்திருக்கும் இந்த சம்பவத்திற்கு உடனடி முடிவுக்கட்ட வேண்டும். மேலும், பொலிஸாரும், பொது நிர்வாக அதிகாரிகளும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

குமாரபுரம் கிராம மக்கள் கடந்த காலங்களிலும் இனவாதத்தால் பல்வேறு துயர அனுபவங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, இப்போதைய சூழ்நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் அரசின் கடமை என குகதாசன் எம்.பி. மேலும் வலியுறுத்தினார்.

மேலும், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும், அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உகந்த சூழல் உருவாக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயம் மற்றும் நீதி நிலைநாட்டப்படாவிட்டால், மக்கள் மத்தியில் மேலும் அச்சம் உருவாகும் என்பதையும், இது எதிர்காலத்தில் இன்னும் பெரிய பிரச்சினைகளை உருவாக்கக்கூடியதாய் இருப்பதையும் அரசு உணர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குமாரபுரத்தில் நடைபெற்ற தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பாவி மக்களுக்கு நீதியளிக்க வேண்டும் எனவும் அவர்களது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் என அவர் கடும் கண்டனத்துடன் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

லெஜண்ட் கிரிக்கெட் ஆட்டநிர்ணய சதியில் இந்திய மேலாளருக்கு 4 வருட சிறை!

Pagetamil

‘ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சில்லை… வீச்சுத்தான்’: அர்ச்சுனா இல்லாத நேரத்தில் சந்திரசேகரன் வீறாப்பு!

Pagetamil

பக்குவப்படாத அர்ச்சுனா எம்.பியானதன் விளைவு: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்!

Pagetamil

Leave a Comment