சம்மாந்துறையில் இரண்டரை அடி நீளமான வாளுடன் நபர் கைது

Date:

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர், இரண்டரை அடி நீளமான வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சட்டவிரோதமாக வாளை உடைமையில் வைத்திருந்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து மீட்கப்பட்ட வாள் சான்றுப் பொருளாக கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேக நபரை சான்றுப் பொருள்களுடன் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்