Pagetamil
குற்றம்

யாழ் தேவி தொடருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் – மூவர் கைது

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் பயணிகள் கொண்டிருந்த யாழ் தேவி தொடருந்து மீது தொடர்ச்சியாக கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குறித்த தாக்குதல் சம்பவத்தில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளதோடு, அவர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் நேற்று முன்தினம் (21) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்த தொடருந்து மீது நடத்தப்பட்டது. இதன் போது தொடரூந்தில் இருந்த பயணிகள் கல்வீச்சு தாக்குதலால் அச்சத்தில் உறைந்தாக தெரிவித்திருந்தனர்.

மேலும் தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை தற்செயலாக படம் பிடிக்கும்போது அந்த தாக்குதல் காணொளியாக பதிவாகியுள்ளது.

ஏற்கனவே நடாத்திய கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து யாழ். தொடருந்து நிலையத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் யாழ். மாவட்ட பிரதிப் காவல்துறைமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது 15-13 வயதுகளுக்குட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் ஏற்கனவே சிறு சிறு குற்றங்ளை புரிந்தவர்கள் என காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை பெற்றோர்களின் உதவியுடன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தீவிரமான தாக்குதல்கள் தொடருந்து பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதோடு, இது ஒரு கடுமையான சட்ட மீறல் என்பதும் சமூகத்திற்கே பெரிய எச்சரிக்கையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

Leave a Comment