சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டு, இது உலகெங்கும் பரவலான கவலைகளை உருவாக்கியுள்ளது.
COVID-19 தொற்றுநோயை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் போல், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயத்தை கொண்டுள்ள இந்த வைரஸ் HKU5-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் வௌவால்களில் காணப்பட்டு, அதனுடன் தொடர்புடைய மனிதர்களிடமிருந்து பரவுவதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த புதிய வைரஸ் MERS வைரஸின் துணைப் பரம்பரையைச் சேர்ந்ததாகவும், அது மனித செல்களுடன் இணைவதற்கான திறன் கொண்டுள்ளது. விஞ்ஞானிகள் அதனை ஆராய்ந்தாலும், அது மனிதர்களிடையே எவ்வளவு விரைவாக பரவும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.
தற்போது, குவாங்சோ அறிவியல் அகாடமி, வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் வுஹான் வைராலஜி நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த வைரஸை ஆராய்ந்து வருகின்றனர்.
HKU5-CoV-2 மனிதர்களைப் பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதால், உலகளாவிய அளவில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இது தொடர்பான மேலும் ஆராய்ச்சிகள் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.