தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அனைத்து நிதி சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பட்டியலும் இந்த அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், தலைமையகக் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாதே மிலாதே ஈப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு, டருல் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம், சேவ் த பேர்ள்ஸ் போன்ற அமைப்புகளும் இந்தத் தடையின் கீழ் அடக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்