சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி வடக்கு கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
போராளிகள் நலன்புரி சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட சுமார் 18,000 கையெழுத்துக்கள் நேற்று (18) ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் நிர்வாக செயலாளரிடமும், பிரதமர் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளரிடமும் கையளிக்கப்பட்டது.
போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரும், அருட்தந்தை சக்திவேலும் இந்த கையெழுத்து பிரதிகளை கையளித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1