பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரச மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் தனது பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டார்.
சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்கால நீடிப்பு நீதித்துறையின் செயற்பாடுகளில் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1