“லிட்டில் ஹார்ட்ஸ்” இணைய பணமோசடியில் இருவர் கைது

Date:

இணையத்தின் மூலம் “லிட்டில் ஹார்ட்ஸ்” என்ற போலிக் கணக்கை உருவாக்கி பணம் தருவதாகவும், “ஹார்மிண்டேஷன்” கணக்கின் மூலம் பணப்பரிசு வழங்குவதாகவும் கூறி, 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மோசடி கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறைப் பகுதியிலும், நரோவ்வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்ப பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நொச்சிகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சேனாதிரகே துலான் மஹேஷித மற்றும் பலவியா பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாணிக்குகே சந்தருவன் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சேனாதிரகே துலான் மஹேஷித சமூக ஊடக ஆர்வலர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய ஊடுருவல் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்