சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், மக்களின் புகார்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கும் சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 0766412029 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மட்டுமே புகார்கள் அனுப்புமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தப் புகார்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடி மற்றும் நீடித்த தீர்வுகள் எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சேவை வாரத்தின் ஐந்து நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும். இந்த புதிய நடைமுறை கடந்த 14 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களை அதிகமாக ஈடுபடுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் நேரடியாக அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரிடம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கொண்டு செல்லும் வகையில் இந்த வாட்ஸ்அப் சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது