தனியார் வாகன சாரதியை கடுமையாக தாக்கி அவரது வாகனத்தை களவாடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ எனும் இடத்தில் வழியில் நின்றிருந்த நால்வர் குறித்த வாகனத்தை மறித்து ஏறி பயணம் செய்த வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறிய நால்வரினால் குறித்த வாகன சாரதி இறக்குமளவிற்கு தாக்கப்பட்டதோடு, அவரது வாகனம் களவாடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காட்டு வழிகளிற்குள்ளோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களூடாகவோ பயணம் செய்கையில் இவ்வாறான செயல்களை கொள்ளையர்கள் செய்கின்றனர்.
ஆகவே தனியார் வாகனகளை வைத்திருக்கும் ஓட்டுனர்கள் தாம் வழமையாக பயணம் செய்யும் வழி தவிர்த்து தெரியாத வழிகளில் பயணம் செய்வதை இயன்றளவு தவிர்க்கவும் என எச்சரிக்கப்டுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1