அவுஸ்திரேலியாவில் குடியேற்ற சட்டங்களை மீறியவர்களை நாடுகடத்த One Nation கட்சி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்தும் பொருட்டு One Nation கட்சி யோசனையை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன், நாட்டின் குடியேற்ற அமைப்பில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் எனவும், மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், குடும்ப உறுப்பினர்கள் மாணவர் வீசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்படுவதை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
புலம்பெயர்ந்த சமூகத்தால் அவுஸ்திரேலியர்கள் தங்கள் பல சலுகைகளை இழக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாக One Nation கட்சித் தலைவர் பவுலின் ஹான்சன் மேலும் தெரிவித்துள்ளார்.