ஆயுர்வேத வைத்தியசாலை மின்னுயர்த்திக்குள் இன்று ஏற்பட்ட மின்சாரத்தடை காரணமாக சிக்கிய நபர் ஒருவரை வைத்தியசாலை பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (09) பகல் 11 மணியளவில் ஏற்பட்ட மின்சாரத் தடை, மூன்று மணிநேரத்திற்குப் பிறகு பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பியது. இருப்பினும், 2.10 மணியளவில் மின்சாரம் மறுபடியும் துண்டிக்கப்பட்டது.
இந்த குறுகிய கால இடைவெளியில், பொது கட்டிடங்களில் மின் விசிறிகள், மின்னுயர்த்திகள் உள்ளிட்ட மின் இயந்திரங்கள் செயற்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து, இராஜகிரியாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டிடத்தில் அமைந்திருந்த மின்னுயர்த்திக்குள் பணியாளர் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே, வைத்தியசாலை பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு, கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு குறித்த நபரை பாதுகாப்பாக மீட்டெடுத்தமை குறிப்பிடத்தக்கது.