வவுனியாவில் A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று (06) இரவு பதிவாகியுள்ளது.
வவுனியா நகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், வவுனியா மகாவித்தியாலயத்திற்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதைக் கண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அருகில் சென்ற பொதுமக்களும் தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும், மோட்டார் சைக்கிளின் பெரும்பாலான பகுதியும் எரிந்து நாசமாகிய பின்னரே தீ அணைக்க முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத் தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் இன்னும் துல்லியமான தகவல்கள் வெளியாகாத நிலையில், இது மோட்டார் சைக்கிளின் மின் கோளாறு காரணமாக ஏற்பட்டதா, அல்லது எரிபொருள் கசிவு காரணமாக தீப்பற்றியதா என்பதற்கான விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சில நிமிடங்களுக்கு பதற்றமான நிலையை ஏற்படுத்தியிருந்தது.