திருகோணமலையில் அமைந்துள்ள கடலோர கிராமங்களுள் ஒன்றான இளக்கந்தை பகுதி வாழ் மீனவர்களால் இன்றைய தினம் (07) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளக்கந்தை பகுதியில் சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி குறித்த பகுதி வாழ் மீனவர்கள் இன்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இளக்கந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு, சட்டவிரோதமாக இடம்பெறும் திரால், ஸ்போட்டர் லைட், வெடிகுண்டு மீன்பிடி உள்ளிட்ட முறைகளை உடனடியாக தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி காரணமாக தம் தொழில் வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், சட்டவிரோத மீன்பிடியை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் மேலும் தீவிர போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.