அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உருவ பொம்மையை எரித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் சமீப காலமாக இடம்பெற்று வரும் நடவடிக்கையாக உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், அமெரிக்காவில் சட்ட விரோத குடியிருப்பாளர்கள் என இனங்காணப்பட்ட 205 இந்தியர்களும் மனித உரிமை மீறல் அடிப்படையில் கைவிலங்கிடப்பட்டு அமெரிக்க இராணுவ விமானத்தில் நாடுகடத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு, இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் கைவிலங்கு போட்டு கொடுமைப்படுத்தியதற்கு கண்டம் தெரிவித்து இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கைகளில் கை விலங்கு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.