சம்மாந்துறை நெற் சந்தை சபையின் கிளை இன்று (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, இன்று (06) வியாழக்கிழமை இந்த கிளை செயற்பாட்டுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், விவசாயிகள் தங்களின் நெல் விளைபொருட்களை சரியான முறையில் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சம்மாந்துறை கிளையின் நெற் களஞ்சியசாலை, நெல் கொள்வனவை மேற்கொண்டு பாதுகாக்கும் வகையில் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாகவும், அதனை நேரில் பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நல்ல மதிப்பில் விற்பனை செய்யும் வகையில், இவ்வகை சந்தை வசதிகள் பயனளிக்கும் என்று நெற் சந்தை சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1