கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Date:

நடிகர் சிலம்பரசன் தனது 42-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாயின.

அதன்படி மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தை அடுத்து சிம்புவின் 49-வது படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இதை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதன் அறிவிப்பில் ‘தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடன்ட்’ என டேக் லைன் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிம்பு கல்லூரியை பின்னணியாக கொண்ட கதையில் நடிக்கிறார்.

ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்புத் தொடங்குகிறது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவரது 50-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதை ‘ஆட்மன் சினி ஆர்ட்ஸ்’ சார்பில் நடிகர் சிம்புவே தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையடுத்து அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்புவின் 51-வது படமான இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் போராட்டங்களில் 3,117 பேர் பலி

டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின் போது 3,117 பேர் கொல்லப்பட்டதாகவு...

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்