துருக்கியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான செயலக அமர்வில் கலந்துகொள்ள சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உள்ளிட்ட சிலருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை குற்றவியல் நடபடிமுறைக் கோவைச் சட்டத்தின் 106 (1), (2), (3)ம் பிரிவுகளின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்றுக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 8வது சரத்தின்படி, தேசிய தினமானது பெப்ரவரி 4ம் திகதி கொண்டாடப்படவேண்டும். இதனிடையே, மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதியாதிக்க எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் இரா. சாணக்கியகியன் உள்ளிட்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளவர்களால் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது.