ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் ஒத்துழைப்புமாறும் அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில், நாட்டின் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஒற்றுமையுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக நலன், பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய ஒற்றுமையை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இலங்கை மக்களின் ஒற்றுமை மற்றும் ஒப்புரவால் ஒரு புதிய மாற்றத்துக்கான பாதை உருவாகும் எனவும் ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1