Site icon Pagetamil

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் பன்சேனை அடைச்சல் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற ஒருவர் மின்கம்பியில் மோதிய நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று (03.02.2025) அதிகாலை 02.00 மணியளவில் வயல் காவலுக்கு சென்ற குறித்த நபர் யானை துரத்தியதில் மின்கம்பியில் மோதி மின்சாரத் தாக்கத்திற்குள்ளாகி  உயிரிழந்துள்ளார்.

பன்சேனையை பிறப்பிடமாகவும் முதலைகுடாவை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் – சீராளசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Exit mobile version