29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

மஹாபொல மானியம் 4 மாதங்களாக நிலுவை – மாணவர்கள் அவதிப்பாடு!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் மானியங்கள் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ரூ.7,500 மாதாந்திர கொடுப்பனவு போதுமானதாக இல்லை என்பதுடன், அதை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும் என மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, வாழ்க்கைச் செலவினை முன்னிட்டு மாணவர்களின் நிலைமை மிகவும் கடினமானதாக மாறியுள்ளதாகவும், இதை கருத்தில் கொண்டு மாதாந்திர கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் எனவும் மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் தெரிவித்தார்.

மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியின் முன்னாள் இயக்குநர் பராக்கிரம பண்டார இதனை உறுதிப்படுத்தி, தற்போது இந்த மானியங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1.8 பில்லியன் செலவாகிறது என்றும், இதை ரூ.7,500 ஆக உயர்த்தினால் செலவு 2 முதல் 3 பில்லியன் ரூபாய் வரை அதிகரிக்குமெனவும் தெரிவித்தார்.

மஹாபொல கொடுப்பனவை ரூ.10,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், தற்போதைய நிதியளிப்பு பற்றாக்குறை காரணமாக அந்த தொகையை வழங்க முடியவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். இதனால், மாணவர்கள் எதிர்பார்த்த உதவிகளை பெற முடியாமல் கடுமையான நிலைமையை சந்திக்க வேண்டியுள்ள நிலையில், அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment