27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இந்தியா

இலங்கையின் கடைசி தமிழ் மன்னருக்கு தமிழ்நாட்டில் அஞ்சலி

இலங்கையின் கடைசி தமிழ் மன்னராக அறியப்படும் ஸ்ரீவிக்ரம ராஜசிங்கனின் 193வது நினைவு நாள் விழா இன்று (30) தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்துள்ள மன்னர் நினைவிடமான முத்து மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கண்டி மன்னரின் கல்லறை அமைந்துள்ள இந்த முத்து மண்டபத்தில், மன்னரின் வாரிசுகளின் ஏற்பாட்டில் மாலை 4.00 மணிக்கு தொடங்கவுள்ள இந்த நிகழ்வில் பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொள்ள உள்ளனர்.

ஆண்டுதோறும் மன்னரின் வாரிசுகளால் மன்னர் மறைந்த நினைவு நாளில் அவரின் கல்லறையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மன்னரின் குடும்பங்களின் சார்பில் இந்த குரு பூஜை விழா நடைபெறவுள்ளது என விழா ஒருங்கிணைப்பாளரும் மன்னரின் கடைசி 7வது வாரிசுமான வி. அசோக்ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த ஸ்ரீவிக்ரம ராஜசிங்கன், ஆங்கிலேயர்களால் பதவி நீக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முதல் தமிழ் மன்னராவார். அவரின் சேவைகளை நினைவுகூரும் வகையில், அவரது நினைவு நாளை ஆண்டு தோறும் முழுமையான மரியாதையுடன் கொண்டாடி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

இந்திய பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

east tamil

Leave a Comment