Site icon Pagetamil

திருகோணமலை தனியார் பேருந்து ஊழியர்கள் போராட்டம்

இன்று (29) மதியம் 12 மணியளவில் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில், கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையினால் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக பேருந்துகளுக்கான பயண அனுமதிகள் வழங்குவதில் ஊழல்கள் அதிகரித்து வருவதாகவும் போராட்டக்காரர்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், அனுமதிகள் பொருத்தமற்ற முறையில் வழங்கப்படுவதால், தனியார் போக்குவரத்து சேவையில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும் இதன்போது தெரிவித்திருந்தனர்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இவ்வாறான முறைகேடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதோடு, கிழக்கு மாகாண ஆளுநர் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Exit mobile version