29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

ஆய்வு கூட பரிசோதனையில் வெடிப்பு: 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நீர்கொழும்பில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 12 மாணவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7ம் வகுப்பு மாணவர்கள் குழு, பாடசாலை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கட்டான பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது வெடிப்பு ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆய்வகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த இடரில் 7 சிறுவர்களும் 5 சிறுமிகளுமாக 12 மாணவர்கள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment