27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
இந்தியா

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற இன்பநிதி

அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க, துணை முதல்வர் உதயநிதியுடன், அவரது மகன் இன்பநிதியும் வந்திருந்து போட்டியைக் கண்டு ரசித்தார். திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாது அரசு அதிகாரிகளும் இன்பநிதியிடம் பவ்யம் காட்டியது, சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அவரை வைத்து பரிசு கொடுக்க வைத்தது ஜல்லிக்கட்டு களத்தை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் ‘கவனம்’ பெற்றது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலகலமாக நடந்து வருகிறது. போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். அவருடன் போட்டியைப் பார்க்க, அவரது மகன் இன்பதி நிதியும் உடன் வந்திருந்தார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் போன்றவர்கள், துணை முதல்வர் உதயநிதிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அமைச்சர் பி.மூர்த்தி, உதயநிதிக்கு விழாக்குழு சார்பில் பொன்னடை போர்த்தியபோது இன்பதிநிதிக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

அதுபோல், அமைச்சர் பி.மூர்த்தி எடுத்துக் கொடுத்த விழா ‘பேட்ஜ்’-ஐ தனது சட்டைப் பையில் குத்திக் கொண்ட உதயநிதி, மற்றொரு ‘பேட்ஜ்’ஜை வாங்கி தனது மகன் இன்பதிநிதிக்கும் பனியனில் அவரே ஆசையாக குத்தி மகிழ்ந்தார். உதயநிதியும், இன்பதிதியும் அருகேருகே அமர்ந்து போட்டியை கண்டுகளித்ததோடு அவ்வப்போது போட்டியில் நடந்த சுவாரசியங்களை குதூகலமாக பேசி சிரித்துக் கொண்டனர். இருவரும் வாடிவாசல் பகுதிகளில் ‘ட்ரோன்’-ஐ இயக்கி ஜல்லிக்கட்டு காட்சிகளை ரசித்துப்பார்த்தனர். இன்பதிநிதியுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் 4 பேரும் வந்திருந்தனர். அந்த நண்பர்களும், மேடையில் உதயநிதி, இன்பநிதி அருகே அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்தனர்.

சில நேரம், மாடு முட்டி வீரர்கள் காயமடையும்போது இன்பநிதி, அதிர்ச்சியடைந்து வாடிவாசல் முன் கீழே விழுந்த அவர்களை பரிதாபமாக உற்றுப்பார்த்தார். அவரது அச்சமும், பயமும் அவரது முகத்தில் தெரிந்தது. போட்டியின்போது சில நேரங்களில் சிறந்த மாடுபிடி வீரர், காளைகளுக்கு தங்காசுகளை துணை முதல்வர் உதயநிதி தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார். விழா குழுவினர் அவரது மகன் இன்பநிதியிடமும் தங்க நாணயத்தைக் கொடுத்து பரிசு கொடுக்க வைத்தனர்.

உதயநிதியும், அவரது மகன் இன்பநிதியும் சுமார் 2 30 மணி நேரம் வரை பார்த்து ரசித்து அதன்பிறகு, நிர்வாகிகளிடமும், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரிடமும் விடைபெற்றுச் சென்றனர்.

மதுரை ஊமச்சிக்குளத்தில் இருந்து அலங்காநல்லூர் வரை, துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க, மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 10 கி.மீ., தொலைவுக்கு பிரம்மாண்ட வரவேற்புகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தது. வழிநெடுக, கட்சியினர் உதயநிதிக்கு வரவேற்பு வழங்கினர். அவர் வரவேற்புகளை முடித்து வருவதற்கு தாமதமானதால் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய ஜல்லிக்கட்டு 8.15 மணியளவில் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

ஜல்லிக்கட்டு விழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதியிடம் ‘பவ்யம்’ காட்டிய அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், அதே ‘பவ்யம்’, ‘மரியாதை’யை இன்பநிதியிடம் காட்டினர். ஏற்கெனவே, சமீப காலமாக சில திமுக கட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் தந்தை உதயநிதியுடன் இன்பநிதி தலைகாட்டி வருகிறார். இன்பநிதியை கட்சியின் அடுத்த தலைமுறையாக அரசியலில் ஈடுபடுவதற்கான வெள்ளோட்டமாகவே, உதயநிதி மகனை சமீபகாலமாக இதுபோன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளில் அழைத்து வருவதாக திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் ஆதரவும், அரசியல் வட்டாரத்திலும் விமர்சனமும் எழுந்து வருகிறது. மேலும், அரசியலில் ஈடுபடுவதற்கு முன் மகன் இன்பநிதியை முதற்கட்டமாக கட்சி நிர்வாகிளிடமும் அறிமுகப்படுத்துவதற்காகவும் உதயநிதி தன்னுடன் அழைத்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த உதயநிதி, இன்பநிதி ஒன்றாக விழா மேடையில் சேர்ந்திருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பதிவிட்டு ‘திமுகவில் அடுத்த தலைமுறை உதயம்’ என பதிவிட்டு வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ‘இன்பநிதி’ வருகை திமுகவில் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் ‘கவனம்’ பெற ஆரம்பித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பள்ளி மாணவிக்கு விவாகம் – 5 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

Leave a Comment