1974ஆம் ஆண்டின் யாழ்ப்பாணத்தில் நடந்த 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதியில் இடம்பெற்ற படுகொலைகள், தமிழர் வரலாற்றில் ஆழமான துயரத்தை ஏற்படுத்தியவை. அந்த மறக்க முடியாத நாளின் 51வது ஆண்டு நினைவு நாளுக்கான அஞ்சலி நிகழ்வு நாளைய தினம் (10.01.2025 வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் படுகொலை நடந்த இடமான தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு தூபி முன்பாக நடைபெறவுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 தமிழர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, யாழ்ப்பாணம் மக்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1