26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

சமீபத்தில் இலங்கைக்குள் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் நுழைந்ததை அடுத்து, வரும் நாட்களில் சுமார் 100,000 சட்டவிரோத குடியேறிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் இருப்பதாக புலனாய்வு சேவைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர், இது ஒரு பாரதூரமான சமூகப் பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

“காவல்துறை விசாரணைகள் மற்றும் உளவுத்துறை அறிக்கைகளின்படி, வரும் நாட்களில் 100,000 சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்கு வரக்கூடும். இதை நாட்டில் ஒரு சமூகப் பிரச்சினையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார்.  நாடாளுமன்றத்தில் நேற்று, ரவூப் ஹக்கீமின் கேள்விக்கு பதிலளித்தபோது அவர் கூறினார்.

சமீபத்தில் இலங்கைக்குள் நுழைந்த ரோஹிங்கியாக்கள் குழு மனித கடத்தல்காரர்களுக்கு 5 மில்லியன் டொலர்கள் மற்றும் பயணத்திற்காக 8 மில்லியன் டெதலர்களை செலுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த மக்கள் குழு அகதிகளாகக் கருதப்பட்டால், அவர்கள் சர்வதேச சட்டங்களின்படி கையாளப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

“அவர்கள் தற்போது சட்டவிரோத குடியேறிகளாகக் கருதப்படுகிறார்கள். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையால் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. விசாரணைகளைத் தொடர்ந்து, அவர்கள் அகதிகளாகக் கருதப்பட்டால், அவர்கள் சர்வதேச சட்டங்களின்படி கையாளப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

அகதிகள் குழுவை மியான்மருக்கு நாடு கடத்தக்கூடாது, ஆனால் UNHRC இன் உதவியுடன் அவர்களை வேறு நாட்டிற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கூறினார்.

அந்தக் குழுவை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் விவாதிக்கவில்லை என்றும், வெளியுறவு அமைச்சகம் மியான்மர் அரசாங்கத்துடன் ஆரம்பகட்ட விவாதத்தை மட்டுமே நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் விஜேபாலா கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment