வடமராட்சி வல்லை பகுதியில் நேற்றிரவு இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண நகர பகுதியில் இருந்து பருத்தித்துறைய நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இளைஞர், வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதியதனால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் விஜயகுமாரின் 21 வயதுடைய மகன் மணிகண்டன் ஆவார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



