26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
உலகம்

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

சமீப காலங்களில் எலான் மஸ்க் உலக அரசியலின் முக்கிய பாத்திரமாக மாறி வருகிறார். அவரது X மீடியா, முன்னாள் ட்விட்டர் என்ற பெயரில் செயல்பட்டது, தற்போது உலகின் பல நாடுகளில் மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே எலான் மஸ்க் தனது அதிகாரத்தை X மீடியாவை பயன்படுத்தி பல உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுகிறாரென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வெளிநாடுகளின் ஊடகங்கள் பொதுவாக பக்கச்சார்பாக செயல்படுவதை கட்டுப்படுத்துவது அமெரிக்க அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறை. ஆனால் எலான் மஸ்க், தனது X மீடியாவை முன்னிலைப்படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.

இந்த செயல்பாடு அவருக்கு, உலக அரசியலின் “கிங் மேக்கர்” என்ற பெயரையும், பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. “உலக அரசியலில் உள்ள தனிநபரின் சாதாரண மீடியா தலையீடு தான், அரசியல் பாணியையும், தேர்தல் முடிவுகளையும் மாற்றும் அளவுக்கு ஆபத்தாக மாறி விடுமா?” என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.

பிரிட்டன் மன்னர் சார்ளஸ் அன் நாட்டு அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளதோடு, பிரிட்டன் பிரதமரோடு பனிப் போர் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இது போக எலான் மஸ்க், ஜேர்மன் அதிர்பர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தற்போது அவர் பார்வை ஸ்பெயின் நாடு மீது திரும்பியுள்ளது. இதனை உடனே கண்டித்துள்ள ஸ்பெயின் வெளிவிவகார பேச்சாளர், எலான் மஸ்க்கின் X மீடியாக பக்கச் சார்பின்றி இயங்க வேண்டும் என்றும், உள்நாட்டு விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடக் கூடாது என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

இந்த நிலைமையை முன்னிட்டு, பல நாடுகள் எலான் மஸ்க்கின் நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. X மீடியாவின் செயல்பாடுகள், அதன் உரிமையாளரின் எண்ணங்கள் மற்றும் உலக அரசியலின் மீதான அதன் தாக்கம் குறித்து தொடர்ந்து கவனிக்கப்படும் என தெரிகிறது.

உலகின் நம்பர் 1 செல்வந்தராக எலான் மஸ்க் வலம் வருகிறார். 425B பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்கள் அவரிடம் உள்ளது. அவர் நினைத்தால் உலகில் உள்ள பல நாடுகளை விலை கொடுத்து வாங்க முடியும். அந்த அளவு செல்வம் அவரிடம் கொட்டிக் கிடக்கிறது. அதனால் அவர் தலை கால் புரியாமல் ஆடுகிறார் என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூத்த ஹிஸ்புல்லா தலைவர் சுட்டுக்கொலை

Pagetamil

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

Leave a Comment