26.5 C
Jaffna
January 16, 2025
Pagetamil
கிழக்கு

லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் இன்று

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் மற்றும் நீதிகோரிய போராட்டம், இன்று (08.01.2025) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், வா. கிருஸ்ணகுமாரின் ஏற்பாட்டில் சிரேஷ்ட ஊடகவியலாளர் க. சரவணன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோ. கருணாகரன், பா. அரியநேத்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் க. சத்தியசீலன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நினைவேந்தல் நிகழ்வின் போது, லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர்களான கங்காதரன் மற்றும் சரவணன் ஆகியோரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு, பங்குகொண்டவர்களால் ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான விசாரணைகளை விரைவுபடுத்துதல், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமுறைக்கு உட்படுத்துதல், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு, போராட்டக்காரர்கள் தங்கள் கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழுகிய நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம்

east tamil

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (TID) தளம் அமைப்பினர் விசாரணை

east tamil

லண்டன் கனக துர்க்கை அம்மன் அறக்கட்டளை நிதியுடன் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

east tamil

மூதூரில் மற்றுமொரு யானை உயிரிழப்பு

east tamil

உவர்மலையில் கன்று விபத்து – உரிமையாளருக்கு அறியப்படுதவும்

east tamil

Leave a Comment