இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

Date:

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல் படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல.ஹெச் துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர்.

இது குறித்து போர்பந்தர் பொலிஸ் சூப்பிரெண்டு பகிரத்சிங் ஜடோஜா கூறுகையில், இன்று மதியம் 12.10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல் படையின் மேம்பட்ட இலகுர ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியின் போதே விபத்து ஏற்பட்டது என கூறியுள்ளார்.

தொழில்நுட்ப சிக்கலே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலிமுகத்திடல் மின்கம்பத்தில் ஏறி போராடிய இளைஞன்!

"களனி விகாரையில் தியானம் செய்துவிட்ட வந்த போது நான் பொலிசாரால் கைது...

சர்ச்சைப் பிக்கு சிறைக்குள்ளும் சலசலப்பு!

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

உலகம் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது: ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்