திருகோணமலை கல்வி வலயத்தில் அதிபர் நியமனங்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்ட காலமாகவே நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பல பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க வேண்டிய நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறாமல் இருக்கின்றன என கூறப்படுகிறது.
சமீப காலமாக, கிழக்கு மாகாணத்தில் அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும், திருகோணமலை கல்வி வலயத்தில் செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம், உவர்மலை விவேகானந்தா கல்லூரி, நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி எனும் மூன்று முக்கிய பாடசாலைகளின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
இந்த பாடசாலைகளுக்கு அதிபர் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் ஏன் கோரப்படவில்லை என்பது தொடர்பாக இதுவரையிலும் தெளிவான சான்றுகள் அறியப்படவில்லை. இது கல்வி அமைச்சின் ஊழல் நடவடிக்கைகளுக்கு அடிப்படை இருந்திருக்கக்கூடும் என சமூகத்தில் சிலர் தெரிவித்துவருகின்றனர்.
குறித்த இவ் விடயம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.