திருக்கோவில் தாண்டியடி – உமிரி கடலில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் சடலம் இன்று(26.12.2024) மீட்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி மூவர் காணாமல் போயிருந்த நிலையில், திருக்கோவில் பகுதியில் 17 வயதான சிறுவனின் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் – தாண்டியடி உமிரி கடலில் நேற்றைய தினம் (25.12.2024) நீராடச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அவர்களை காப்பாற்றச் சென்ற 38 வயதான நபரும் இதன்போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரே கடலில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த நபர் மற்றும் 15 வயதான மற்றுமொரு சிறுவனையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.