மின்சாரத்திற்கான தேவை இந்த ஆண்டை விட 1 பில்லியன் அலகுகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், 2025 ஆம் ஆண்டில் மொத்த தேவை 17.5 பில்லியன் அலகுகளாக உயரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை, 2025ன் முதல் அரையாண்டில் கட்டணக் குறைப்புகளை நிராகரித்துள்ளது. போதுமான அளவில் குறைந்த விலை மின்சக்தி மூலங்கள் இல்லாமை மற்றும், CEB இன் நிதி, செயல்பாட்டு ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் காரணமாகவே இம் முடிவிற்கு வந்துள்ளது.
ஏற்கனவே நீர் மற்றும் நிலக்கரி மூலம் அதன் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் இருக்கும் நிலையில் எண்ணெய் மூல உற்பத்தியே இப்பற்றாக்குறையை ஈடு செய்வதாக அமையும். மேலும் இதனால் செலவுகள் கணிசமாக அதிகரிக்க கூடும்.
முன்னர் PUCSL இனால் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக ரூ. 41 பில்லியன் ஒதுக்கப்பட்ட அதேவேளை, இவ்வாண்டின் இலாபத்திலிருந்து ரூ. 112 பில்லியன் ஏற்கனவே CPC க்கு செலுத்துதல் உட்பட கடன்களை தீர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், நீண்ட காலத்திற்கு கட்டணங்களை நிலைப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை-சூரிய, காற்று மற்றும் LNG யை ஒரு இடைநிலை எரிபொருளாக விரைவுபடுத்த வேண்டிய அவசரத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.