கடந்த 10ஆம் திகதி பிற்பகல் நீராடச் சென்ற போது சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு நீரில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண் மற்றும் ஆண் ஒருவரை, கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அஹுங்கல்ல பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.
இந்த நாட்டிற்கு விஜயம் செய்து அஹுங்கல்ல சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 29 வயதான ZAKARYAN MANVEL என்ற ஆர்மேனிய பெண்ணும், 30 வயதான உக்ரைனை சேர்ந்த MNATSKANYAN NAIRA என்பவரும் காப்பாற்றப்பட்டனர்.
இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்று, அடிப்படை முதலுதவி செய்த பின்னர், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1