25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை கிழக்கு

உரிமை கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

AHRC நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலையில் கிழக்கு மாகாண பிரதேச சிவில் வலையமைப்பினால் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (11.12.2024 – புதன் கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வானது குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற உரிமை ரீதியான பிரச்சினைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மூவின மக்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், துறைசார் சிவில் அமைப்புக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், விவசாயிகள், நிலத்தினை இழந்தவர்கள், மத வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டவர்கள், மீனவர்கள், பெண்கள், சிவில் செயற்பாட்டாளர்கள மற்றும் ஊடகவியலாளர்கள்; அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்னிருந்து ஆரம்பமாகிய இப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியலுக்கான தீர்வு, இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கான நீதி, மத வழிபாட்டு உரிமை, இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பும், பாதிப்புக்களுக்கான நஷ்ட ஈடு, வடக்கு, கிழக்கில் சுவீகரிக்கப்படும் காணிகளை மீள வழங்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்பு கூறல், யுத்தத்தினால் அவயங்களை இழந்தோரிற்கான நலன், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கல், கூட்டுப்படுகொலைகளுக்கான நீதி, புதிய அரசியலமைப்புச் சபையில் வடக்கு கிழக்கு மக்களின் பங்கேற்பு, அரசியல் கைதிகளை விடுதலை, மீனவர்களுக்கான நிவாரணம், பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கான தீர்வு, 76 வருட தேசிய இனப்பிரச்சிக்கான நிலையான அரசியல் தீர்வு என பல்தரப்பட்ட கோரிக்கைளை கோசங்களை எழுப்பி இறுதியில் குளக்கோட்டன் மண்டபத்தை அடைந்தனர்.

இப் பிரச்சார பேரணியானது திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தினை அடைந்ததும் கிழக்கு மாகாணத்திலுள்ள மேற்கூறிய பாதிப்புக்களைக் கொண்ட மக்கள் தங்களுக்கான பிரச்சினைகளை முன்வைக்கும் மண்டப நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வானது, கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பின் தலைவர் திரு.ரெஜினோல்ட் சுதர்சன் அவர்களின் தலைமையில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திரு.மதிவண்ணன், கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியக செயலாளர் திரு. ராஜசேகர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் யு.ட இசைதீன், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் AHRCஇன் நிறைவேற்று சபையின் செயலாளருமான சட்டத்தரணி திருமதி.பிரசாந்தினி மயூரன், AHRC இணைப்பாளர் திரு.கண்டுமணி லவகுசராசா, பிரதி இணைப்பாளர் திரு.அழகுராசன் மதன், ஆகியோரும் கலந்து கொண்டு இடபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் மண்டப நிகழ்வில் மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் தற்போதும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டவர்களால் உரிய அதிகாரிகளுக்கு முன்னால் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு தொடர்பான மகஜர் ஒன்றும் பெண் மனித உரிமை பாதுகாவலர் செல்வி.நாகேஸ்வரன் அவர்களால் வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகள் ஊடாக கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக பாதிக்கப்பட்டவர்களால் ஊடக சந்திப்பு ஒன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் மண்டப நிகழ்வில் மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் தற்போதும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டவர்களால் உரிய அதிகாரிகளுக்கு முன்னால் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு தொடர்பான மகஜர் ஒன்றும் செல்வி.நாகேஸ்வரன் அவர்களால் வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகள் ஊடாக கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக பாதிக்கப்பட்டவர்களால் ஊடக சந்திப்பு ஒன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Pagetamil

பொதுப்பிட்டியவில் வீடோன்றில் தீப்பரவல்

east pagetamil

யாழில் வெள்ளத்தில் வேலை செய்பவர்களுக்கான அவசர அறிவிப்பு!

Pagetamil

திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா

east pagetamil

Leave a Comment