தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியுன் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் அவர் தற்கொலை செய்ய முயன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது.
நாட்டில் கலகம் ஏற்படுத்தியதாகவும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்ற வாரம் ஜனாதிபதி யூன் சுக் இயோல் இராணுவ ஆட்சியை அறிவித்து, ஆறு மணி நேரத்துக்குப் பிறகு நாடாளுமன்ற நெருக்குதல் காரணமாக அதை மீட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி யூன் இராணுவ ஆட்சியை அறிவித்ததற்கும் நாடாளுமன்றத்திற்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததற்கும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிம் தூண்டுகோலாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதற்கிடையே, தென் கொரிய காவல்துறையினர் ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.