கிழக்கு மாகாணத்தில் விருது பெற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெறாமல் இருந்து வந்த நிலையில் இன்றைய தினம் (11.12.2024 – புதன் கிழமை) திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கிழக்கு மாகாணத்தின் முக்கிய செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த இந் நிகழ்வில் கடந்த 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் இலக்கிய துறை சார்ந்த விருதுகளை பெற்ற கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை கிழக்கு மாகாண பண்பாட்டு திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1