மூதூர் இரால்குழி பகுதியில் காட்டு யானைகள் உட்புகுந்து அப் பகுதி மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளன.
நேற்றைய தினம் (09.12.2024 – திங்கட்கிழமை) குறித்த பிரதேசத்தில் புகுந்த காட்டு யானைகள் அக் கிராமவாசிகளின் வீடுகள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளன.
இது போன்ற சம்பவங்கள் இரால்குழி கிராம மக்களுக்கு கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, இது தொடர்பாக பொறுப்பான அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி தமக்கான தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் அங்கு வாழும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1