சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாக, ரஷ்யாவின் உயர்மட்ட தகவல்களின் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா அரச ஊடகளும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன
கிரெம்ளினில் உள்ள ஆதாரத்தின்படி, அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவிற்கு வந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளது.
“சிரிய நெருக்கடிக்கு அரசியல் தீர்வுக்கு ஆதரவாக ரஷ்யா எப்போதும் பேசி வருகிறது. ஐ.நா-வின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
“ரஷ்ய அதிகாரிகள் ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளனர், அதன் தலைவர்கள் ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் சிரிய பிரதேசத்தில் தூதரக பணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்” என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.
அசாத்தின் ஆட்சியின் முக்கிய கூட்டாளியாக ரஷ்யா இருந்து வருகிறது.
பல ஆண்டுகளாக பஷர் அல்-அசாத் அதிகாரத்தில் இருக்க ரஷ்ய இராணுவ சக்தி உதவியது. அசாத் ஆட்சியின் வீழ்ச்சி ரஷ்யாவின் கௌரவத்திற்கு பெரும் அடி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் 2015ஆ-ம் ஆண்டு ஆசாத்தை காப்பாற்ற ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சிரியாவுக்கு அனுப்பினார்.
இராணுவ உதவிக்கு ஈடாக, ஹ்மெய்மிமில் உள்ள விமானத் தளம் மற்றும் டார்டஸில் உள்ள அதன் கடற்படைத் தளத்தின் மீது ரஷ்யாவிற்கு 49 ஆண்டு குத்தகை வழங்கப்பட்டது.