25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குவதென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும், அரிசி ஆலை உரிமையாளர்களுக்குமிடையிலான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் தீவிரமாக செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி நுகர்வோர் அதிகாரசபைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வர்த்தகர்களுடன் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு அதிகூடிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறைகளில் அதிகளவான முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாயிகளுக்கே அதிகளவான சலுகைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எனவே அரிசிக்கான மக்களின் உரிமையில் கை வைக்க வேண்டாம் என அரிசி ஆலை உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி, அரிசியின் விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

♦ஒரு கிலோ நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகும். சில்லறை விலை 230 ரூபா.
♦ஒரு கிலோ வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகும். சில்லறை விலை 220 ரூபா.
♦இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாகும்.
♦ஒரு கிலோ சம்பாவின் மொத்த விலை 235 ரூபாவாகும். சில்லறை விலை 240 ரூபா.
♦ஒரு கிலோ கீரி சம்பா மொத்த விற்பனை விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா.

அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளாந்த அடிப்படையில் அரிசி விலைகளை அடிக்கடி மாற்றுவதை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி, நாளாந்த அரிசி உற்பத்தி மற்றும் ஆலைகளின் விநியோகத்தை கண்காணிக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அரிசி தொடர்பான பிரச்சினைகளை இணக்கமான முறையில் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு அரிசி வியாபாரிகளை ஜனாதிபதி திஸாநாயக்க வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு… விந்தன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்: ரெலோ தலைமைக்குழு தீர்மானம்!

Pagetamil

Leave a Comment