கொடிகாமம்- நெல்லியடி வீதியில் மின்கம்பத்தை வாகனமொன்று இடித்து தள்ளியதால் சில பிரதேசங்களுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.
இன்று (4) மாலை இந்த சம்பவம் நடந்தது.
கொடிகாமம், இராணுவ முகாமின் அருகில் வீதியோரமிருந்த மின்கம்பத்தில் பட்டா ரக வாகனமொன்று மோதியது. இதனால் மின்கம்பம் சரிந்து விழுந்தது.
விபத்தின் பின்னர், சாரதி வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.
மின்கம்பம் சரிந்து விழுந்ததால், வரணி உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1